KAS ஜுவல்லரி
நோக்கம்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமபுற ஏழை எளிய மக்களும் எளிய சிறுசேமிப்பின் மூலம் அவர்களின் தங்கம் , வெள்ளி நகைகள் வாங்கும் கனவை நிஜமாக்கி அவர்களை பொருளாதார ரீதியில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய செய்வதே எங்கள் KAS ஜுவல்லரி நிறுவனத்தின் நோக்கமாகும்.
செயல்பாடுகள்
கிராமபுற மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப திருப்புவனம் (2 கிளைகள் ) மானாமதுரை, பார்த்திபனூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து இடங்களில் KAS Jewellery ஷோரூம்களை நிறுவி தேவையான அளவு தங்கம், வெள்ளி நகைகளை கையிருப்பாக வைத்து புது புது டிசைன்களுடன் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சிறப்பான சேவை செய்து வருகிறோம்.
மேலும் தமிழ்நாட்டிலுள்ள மதுரை, கோவை , சென்னை உட்பட முக்கிய நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மொத்த விற்பனையை (Whole Sales) சிறப்பாக செய்து வருகிறோம்
Mr. R.ஹரிசரவணன்
[B.Sc, M.A, BL]
தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள தூதை என்ற கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலை அடிப்படையாக கொண்ட திரு. N. இராமகிருஷ்ணன் – இராக்கம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர் R.ஹரிசரவணன். திருப்பாச்சேத்தியில் உள்ள அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பையும் அதன் பின் மதுரையிலுள்ள Madura கல்லூரியில் இளங்கலை அறிவியல் (BSc. Physics) படிப்பையும் அதன் பின் மதுரையிலுள்ள Dr. அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்ட படிப்பையும் (BL) முடித்தார். சில காலம் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் தங்க நகைத் தொழிலில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
தனது கடின உழைப்பால் 1998 – ஆம் வருடத்தில் மிகச் சிறிய அளவில் (10 x 10 ) அறையில் இரு பணியாளர்களுடன் தனது KAS ஜுவல்லரி நிறுவனத்தை தொடங்கினார். அனைத்து வாடிக்கையாளர்களிடமும் மிகுந்த நம்பிக்கையும், நன்மதிப்பையும் (Goodwill) பெற்ற KAS ஜுவல்லரி நிறுவனம். தற்போது ஐந்து கிளைகளுடன் 100 -க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் பல இடங்களில் தனது கிளைகளை தொடங்க KAS ஜுவல்லரி நிறுவனர் R.ஹரிசரவணன் ( BSc,BL ) அவர்கள் திட்டமிட்டுள்ளார்.